சிஎஸ்கே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?

சிஎஸ்கே கையில் 8 புள்ளிகள் உள்ளன. பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் எத்தனை வெற்றிகள், எத்தனை புள்ளிகள் தேவைப்படும்?
சிஎஸ்கே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?

சிஎஸ்கே கையில் 8 புள்ளிகள் உள்ளன. பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் எத்தனை வெற்றிகள், எத்தனை புள்ளிகள் தேவைப்படும்?

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புள்ளிகள் பட்டியலில் பெரும்பாலும் கடைசி இரு இடங்களில் இருந்த சிஎஸ்கே அணி, ஞாயிறன்று 8-ம் இடத்துக்கு நகர்ந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மும்பையை கொல்கத்தா வீழ்த்தி 8-ம் இடத்தை மீண்டும் பிடித்துவிட்டது. இதனால் 9-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது சிஎஸ்கே.

சென்னை அணி 11 ஆட்டங்களில் 8 புள்ளிகளும் கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளும் வைத்துள்ளன. பிளேஆஃப் வாய்ப்பு இரு அணிகளுக்கும் உள்ளதா?

இரு அணிகளும் மீதமுள்ள ஆட்டங்களை வென்று முதலில் 14 புள்ளிகளை எடுக்கவேண்டும். சிஎஸ்கேவின் நெட் ரன்ரேட் 0.028 என ஓரளவு ஆரோக்கியமாக உள்ளது. இதனால் அடுத்தடுத்து வெற்றிகள் பெறும்போது நெட் ரன்ரேட் இன்னும் நன்றாக அமையும். 

ஏற்கெனவே புள்ளிகள் பட்டியலில் இரு அணிகள் (குஜராத், லக்னெள) 14 புள்ளிகளுடனும் இரு அணிகள் (ராஜஸ்தான், ஆர்சிபி) 16 புள்ளிகளுடனும் உள்ளன. எனவே சிஎஸ்கே அணி தகுதி பெற முதலில் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றாக வேண்டும். அப்போது சிஎஸ்கே கைவசம் 14 புள்ளிகள் இருக்கும். 

அதிகப் புள்ளிகளைக் கொண்டிருக்கும் குஜராத், லக்னெள ஆகிய அணிகளைத் தவிர 7 அணிகள் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கவும் வாய்ப்பு உள்ளது. (14 புள்ளிகளைக் கொண்டுள்ள ராஜஸ்தானும் ஆர்சிபியும் இனி நேரடியாக மோதுவதில்லை என்பதால் இரு அணிகளில் ஒன்று கட்டாயம் 16 புள்ளிகள் பெறும் வாய்ப்பு இல்லை.) அப்படி ஒரு நிலைமை உருவானால் ரன்ரேட்டின் அடிப்படையில் இரு பிளேஆஃப் இடங்கள் நிர்ணயம் செய்யப்படும். இதனால் மைனஸில் இல்லாத நெட் ரன்ரேட்டைக் கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி, மீதமுள்ள 3 ஆட்டங்களையும் வென்று. நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். பார்க்கலாம், இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com