பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தேவை ஏற்பட்டால் மட்டுமே தோனி இதை செய்வார்: முன்னாள் ஆஸி. வீரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பேசியுள்ளார்.

News image

எம்.எஸ்.தோனி - படம் | ஐபிஎல்

Updated On :1 ஏப்ரல் 2024, 4:53 pm IST

மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் களமிறங்குவார் எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர் அதற்கு முன்பாக களமிறங்குவார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியது.

16 பந்துகளில் 37 ரன்கள் குவித்த தோனியின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், தோனியின் அதிரடியான ஆட்டத்தால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள், தோனி சீக்கிரமாக களமிறக்கப்பட்டிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என தோனிக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

மைக்கேல் கிளார்க் (கோப்புப்படம்)

மைக்கேல் கிளார்க் (கோப்புப்படம்)

இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் களமிறங்குவார் எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர் அதற்கு முன்பாக களமிறங்குவார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தோனி சீக்கிரமாக களமிறங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் எப்போதும் எந்த இடத்தில் களமிறங்குகிறாரோ அதே இடத்திலேயே களமிறங்குவார். தோனியின் ரசிகர்கள் அவர் விரைவில் களமிறங்க வேண்டும் என நினைக்கிறார்கள். தோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆனால், கேப்டன் பதவியை விட்டு விலகிய அவர், சீக்கிரமாக களமிறங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் கட்டாயம் சீக்கிரமாக களமிறங்கியாக வேண்டும் என்ற சூழல் உருவாகும்போது, அணிக்காக சீக்கிரமாக களமிறங்குவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.