ரியான் பராக்கை புகழ்ந்த ஆஸி. முன்னாள் வீரர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரியான் பராக்
ரியான் பராக் படம் | ஐபிஎல்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ரியான் பராக் அரைசதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ரியான் பராக்
ஹாட்ரிக் தோல்வி: மும்பை கேப்டன் ஹார்திக் கூறியது என்ன?

இந்த நிலையில், ரியான் பராக்கின் போட்டி குறித்த விழிப்புணர்வு தன்னை வெகுவாக கவர்ந்ததாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஷேன் வாட்சன் (கோப்புப்படம்)
ஷேன் வாட்சன் (கோப்புப்படம்)படம் | ஐபிஎல்

இது தொடர்பாக ஷேன் வாட்சன் ஜியோ சினிமாவில் பேசியதாவது: ரியான் பராக் இவ்வளவு இளம் வீரர் என்பது எனக்குத் தெரியவில்லை. அவரின் வயது 22 மட்டுமே. இந்த இளம் வயதில் உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது, ஆட்டம் குறித்த அவரது விழிப்புணர்வு எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. சரியான ஓவரை தேர்ந்தெடுத்து பெரிய ஷாட்டுகளை விளையாடுவது என்னை வெகுவாக கவர்ந்தது. ஆரஞ்ச் தொப்பிக்கான கடும் போட்டியாளராக ரியான் பராக் இருக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com