12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் வெற்றி: குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் 17-ஆவது ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது.

சஷாங்க் சிங்

Published On :

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதற்கு முக்கியம காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் அவர்கள் அடுக்க நினைத்தது 19 வயது சஷாங்க் சிங். ஆனாலும் பஞ்சாப் அவருக்கு வாய்ப்பளித்தது.

15 ஐபிஎல் போட்டிகளில் 9 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

நேற்றையப் போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கினை விரட்டும்போது சீனியர் வீரர்கள் ஆட்டமிழக்க குறைவான ஆட்டம் ஆடிய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஷாங்க் சிங்குக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தன்னம்பிக்கை நிரம்பியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.