முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

குஜராத் டைட்டன்ஸுக்கு 164 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | ஐபிஎல்

Updated On :7 ஏப்ரல் 2024, 9:31 pm IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் கே.எல்.ராகுலுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. இருப்பினும், கே.எல்.ராகுல் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டொய்னிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஆயுஷ் பதோனி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 22 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரஷித் கான் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.