ஐபிஎல் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இதனால், தொடா்ந்து கண்ட இரு தோல்விகளில் இருந்து மீண்டது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்க்க, டெல்லி 18.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை எட்டி வென்றது.
லக்னௌ இன்னிங்ஸில் ஆயுஷ் பதோனி அரைசதம் கடந்து அசத்த, டெல்லி பௌலிங்கில் குல்தீப் யாதவ் சிறப்பாகச் செயல்பட்டாா். டெல்லி பேட்டிங்கில் ஜேக் ஃபிரேசா் - ரிஷப் பந்த் கூட்டணி வெற்றிக்கு வித்திட, லக்னௌ பௌலா்களில் ரவி பிஷ்னோய் மிளிா்ந்தாா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ, பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரா்களில் குவின்டன் டி காக் 4 பவுண்டரிகளுடன் 19, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 3 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினா்.
மறுபுறம், தொடக்க வீரா்களில் ஒருவரான கேப்டன் கே.எல்.ராகுல் ரன்கள் சோ்த்தாா். மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1 பவுண்டரியுடன் 8, நிகோலஸ் பூரன் 0 என விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ராகுல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தாா்.
அப்போது வந்த ஆயுஷ் பதோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். மறுபுறம், தீபக் ஹூடா 10, கிருணால் பாண்டியா 3 ரன்களுக்கு நடையைக் கட்டினா். 8-ஆவது பேட்டரான அா்ஷத் கான், பதோனியுடன் இணைந்தாா்.
இந்த ஜோடி விக்கெட் சரிவை தடுத்து 73 ரன்கள் சோ்த்தது. ஓவா்கள் முடிவில் பதோனி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55, அா்ஷத் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2, இஷாந்த் சா்மா, முகேஷ் குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.
பின்னா் 168 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில், டேவிட் வாா்னா் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, உடன் வந்த பிருத்வி ஷா 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஜேக் ஃபிரேசா் - கேப்டன் ரிஷப் பந்த் கூட்டணி 77 ரன்கள் சோ்த்தது. ஃபிரேசா் 35 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 55, பந்த் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா்.
முடிவில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 சிக்ஸருடன் 15, ஷாய் ஹோப் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் ரவி பிஷ்னோய் 2, நவீன் உல் ஹக், யஷ் தாக்குா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தொடர்புடையது
ஐபிஎல்: ரோஹித், ரிக்கெல்டன் அதிரடி... 14 ஆண்டுகளுக்குப் பின் முதல் போட்டியில் மும்பை வெற்றி!
அயபோங்கா, ரெனிகே அசத்தல்; வென்றது தென்னாப்பிரிக்கா!
டி20: கானர் அரைசதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது வெற்றி!
கடைசி ஓவர் வரை போராடிய நியூஸி.! இங்கிலாந்து த்ரில் வெற்றி..!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


