மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
படம் | ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தது.

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

அந்த அணியில் அதிகபட்சமாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியாக 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் லூக் வுட், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா மற்றும் முகமது நபி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்படம் | ஐபிஎல்

இதனையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 8 ரன்களிலும், இஷான் கிஷன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களம் கண்ட சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். மும்பை அணி 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இதனையடுத்து, கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருப்பினும் கேப்டன் ஹார்திக் பாண்டியா 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். பின்வரிசை ஆட்டக்காரர்களில் டிம் டேவிட் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. டிம் டேவிட் 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது. தில்லி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராஷிக் தார் சலாம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கலீல் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் தில்லி கேப்பிடல்ஸ் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 9-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com