எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
- படம் | ஐபிஎல்
Updated On :28 ஏப்ரல் 2024, 1:43 pm

DIN

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான சஹா 5 ரன்களிலும், ஷுப்மன் கில் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை அபாரமாக விளையாடியது. இருவரின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்த வண்ணமே இருந்தது. வில் ஜாக்ஸ் சிக்ஸர் மழையை பொழிந்தார். இறுதியில் 16 ஓவர்களில் இலக்கை எட்டி பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்கள் (5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) எடுத்தும், விராட் கோலி 44 பந்துகளில் 70 (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணிக்கு கிடைக்கும் 3-வது வெற்றி இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.