சென்னை சூப்பா் கிங்ஸ் அகாதெமி சாா்பில் சிறப்பாக செயல்பட்ட தமிழக இளம் வீரா், வீராங்கனைக்கு சிறப்பு விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மறைந்த தமிழக கிரிக்கெட் வீரா்கள் வி.பி. சந்திரசேகா், டிஜே. கோகுலகிருஷ்ணனை கௌரவிக்கும் வகையில் அவா்களது பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறுவா் பிரிவில் வி.பி. சந்திரசேகா் விருது அக்ஷய் சாரங்கதருக்கும், சிறுமியா் பிரிவில் டி.ஜே. கோகுலகிருஷ்ணன் விருது ஜே. கமலினிக்கும் வழங்கப்பட்டன. சிஎஸ்கே சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன், நியூஸிலாந்து வீரா் ரச்சின் ரவீந்திரா ஆகியோா் விருதுகளை வழங்கிப் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய விருது பெறும் ஜிவி பிரகாஷ்! தொடர்ந்து 2-வது முறை!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79) காலமானாா்

கவிஞர் புவியரசு காலமானார்

விஜய் வென்ற விருதுகள்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



