எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆர்சிபிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன்: ஹர்பிரீத் பிரார்

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஹர்பிரீத் பிரார் தனது பந்துவீச்சு குறித்துப் பேசியுள்ளார்.

News image
- படம் | AP
Updated On :26 மார்ச் 2024, 1:02 pm

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஹர்பிரீத் பிரார் தனது பந்துவீச்சு குறித்துப் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தபோதிலும், அந்த அணியின் ஹர்பிரீத் பிரார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார்.

இந்த நிலையில், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முடிந்த அளவுக்கு ரன்கள் எடுக்க முடியாத அளவுக்கு பந்துவீச முயற்சித்ததாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பிரீத் பிரார் தெரிவித்துள்ளார்.

ஹர்பிரீத் பிரார்

ஹர்பிரீத் பிரார்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரன்கள் எடுக்க முடியாத வகையில் என்னால் முடிந்த அளவுக்கு பந்துவீச முயற்சி செய்தேன். அந்த முயற்சியின்போது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன். பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன் என்றார்.

நேற்றையப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஹர்பிரீத் பிரார் வெறும் 13 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.