நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

லக்னௌ அணியின் தலைவர் கே.எல்.ராகுல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

News image

PTI

Updated On :9 மே 2024, 11:11 am IST

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி.

சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 89 (30) ரன்கள், அபிஷேக் சர்மா 75 (28) ரன்கள் குவித்தனர்.

இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்த கே.எல்.ராகுல் கேப்டன்சி (தலைமைப் பண்பு) கேள்விக்குறியாகியுள்ளது.

தோல்வி குறித்து லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:

வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த மாதிரியான பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறோம். இது நம்பமுடியாத பேட்டிங். எல்லா பந்துகளையும் நடு பேட்டில் அடிக்கிறார்கள். அவர்களது திறமைக்கு பாராட்டுகள். சிக்ஸ் அடிக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2ஆவது இன்னிங்ஸில் ஃபிட்ச் வேறு மாதிரி இருந்தது. அவர்களை விக்கெட் எடுக்க வாய்ப்பே வழங்கவில்லை. முதல் பந்திலிருந்தே எங்களை அடித்து நொருக்கினார்கள்.

தோல்வியின் பக்கம் இருக்கும்போது முடிவுகள் எடுத்தது குறித்து நிறைய கேள்விகள் இருக்கும். 40-50 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பவர் ஃபிளேவில் விக்கெட்டுகளை விட்டதால் எங்களால் திரும்பவும் நல்ல கணத்தை கொண்டுவர முடியவில்லை. ஆயுஷ், நிகோலஸ் பூரன் நன்றாக விளையாடி 166 கொண்டு வந்தார்கள். 240 அடித்திருந்தாலும் ஹைதராபாத் சேஸிங் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.