பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு

டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றில் நுழையும் வாய்ப்பில் நீடிக்கிறது.
பெங்களூரு அசத்தல் வெற்றி;  பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு
Shailendra Bhojak

டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.

வில் ஜேக்ஸ் அதிரடி: அதன் பின் இணைந்த ரஜத் பட்டிதார்-வில்ஜேக்ஸ் இணை சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்த வில் ஜேக்ஸ் அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ்.

ரஜத் அரைசதம்: ரஜத் பட்டிதார் தலா 3 சிக்ஸர், பவுண்டரியுடன் 32 பந்துகளில் 52 ரன்களுடன் அரைசதம் விளாசி ரஷீக் சலாம் பந்தில் வெளியேறினார். கேமரூன் கிரீன் மட்டுமே 32 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.

பெங்களூரு 187/9: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு 187/9 ரன்களைக் குவித்தது. பெüலிங்கில் டெல்லி தரப்பில் கலீல் அகமது 2-31, ரஷீக் சலாம் 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெல்லி வெளியேற்றம்: 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட டெல்லி அணியில் அக்ஸர் படேல் தவிர ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினர். அக்ஸர் படேல் மட்டுமே 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 57 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தார்.

19.1 ஓவர்களில் டெல்லி அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூரு தரப்பில் யாஷ் தயால் 3-20, லாக்கி பெர்குஸன் 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியால் பெங்களூர் அணி 5-ஆவது இடத்துக்கு முன்னேறி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் நுழையும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com