சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 2 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும் ஆட்டமிழந்து பேரதியர்ச்சியளித்தனர். அதன்பின், ராகுல் திரிபாதி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அய்டன் மார்கரம் (20 ரன்கள்), நிதீஷ் ரெட்டி (13 ரன்கள்), கிளாசன் (16 ரன்கள்), ஷாபாஸ் அகமது (8 ரன்கள்) எடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆட்டத்தின் இறுதியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்ததால், சன்ரைசர்ஸ் 100 ரன்களைக் கடந்தது.
சன்ரைசர்ஸ் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. குர்பாஸ் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ஒருபோதும் நினைக்கவில்லை: அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி





