தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தாயகம் திரும்பினார் ரபாடா: குஜராத் அணிக்குப் பின்னடைவா?

தாயகம் திரும்பினார் ரபாடா: குஜராத் அணிக்குப் பின்னடைவா?

News image

ரபாடா..

Updated On :3 ஏப்ரல் 2025, 6:41 pm IST

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஐபிஎல் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியிருப்பதாக குஜராத் அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.

குஜராத் அணி நேற்றிரவு நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியிலும் ரபாடா விளையாடவில்லை.

இந்தத் தொடரில் இதுவரை பஞ்சாப் மற்றும் மும்பைக்கு எதிராக 2 போட்டிகளிலும் மட்டும் விளையாடியுள்ள ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ரபாடாவுக்குப் பதிலாக குஜராத் அணியில் அர்ஷத் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட அர்ஷத் கான், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

ரபாடாவுக்குப் பதிலாக மற்றொரு தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி அல்லது ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் கரிம் ஜன்னத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.