அதிக விலைக்கு வாங்கியதால் எல்லா போட்டிகளிலும் ரன்கள் குவிக்க வேண்டுமா? என வெங்கடேஷ் ஐயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியுடனான் போட்டியில் கேகேஆர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட வெங்கடேஷ் ஐயர் இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.
206.9 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய இவருக்கு சூப்பர் ஸ்டிரைக்கர், அதிக பவுண்டரிகள் என பல விருதுகள் கிடைத்தன.
ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். முதல் சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் விமர்சனம் எழுந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு வெங்கடேஷ் ஐயர் பேசியதாவது:
அதிக தொகை, அதிக அழுத்தம்?
நான் பொய் சொல்லாமல் சொல்கிறேன். அதிக விலைக்கு வாங்கியது சிறிது அழுத்தமாகத்தான் இருந்தது. நீங்கள் (ஊடகங்கள், வர்ணனையாளர்கள்) அதிகமாக பேசுகிறீர்கள்.
கேகேஆர் அணியில் அதிகமான தொகையில் வாங்கப்பட்டதால் அனைத்து போட்டிகளிலும் ரன்களை குவிக்க வேண்டிய அவசியமில்லை.
அணி வெற்றிபெற எப்படி உதவுகிறேன் என்பதும் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்குகிறேன் எனபதும்தான் முக்கியமானது.
தாக்கம்தான் முக்கியம்
எவ்வளவு பணம் வாங்கினேன் அல்லது எவ்வளவு ரன்கள் அடித்தேன் என்பது எனக்கு அழுத்தமில்லை. அது எனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதில்லை.
சரி நீங்களே சொல்லுங்கள், எப்போது அந்த அழுத்தம் வெளியேறும்?
நான் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சொல்லி வருகிறேன். 20 லட்சமோ அல்லது 20 கோடியோ அது முக்கியமில்லை. ஒரு அணி வெற்றிபெற எப்படி உதவ முடியுமோ அதைத்தான் நான் செய்ய முடியும்.
பிட்சை குறைகூறக் கூடாது
சில நேரங்களில் எனக்கு மிகவும் சிக்கலான சூழ்நிலைகள் வரும். என்னுடைய வேலை சில ஓவர்களை அடித்து ஆடுவது. என்னால் ரன்களை அடிக்க முடியாவிட்டாலும் அணிக்காக வேலைப் பார்க்கிறேன்.
இந்த ஆடுகளம் நல்ல சவாலான ஒன்று. நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஈடர்ன் கார்டனில் தேவையான அளவுக்கு ரன்களை குவித்தோம். பிட்சை நன்றாக பயன்படுத்தினோம்.
பிட்ச் இப்படி வேலை செய்யுமா அல்லது அப்படி இருக்குமா என நான் எப்போதும் நினைத்து பார்ப்பதில்லை. நாம் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். எப்படி இருந்தாலும் விளையாட வேண்டும். ஆனால், சொந்த மண்ணில் இப்படி கிடைப்பது எங்களுக்கு சிறந்ததுதான்.
அதிரடி பேட்டிங் என்றால் என்ன?
ஆக்ரோஷமாக விளையாடுவதின் அடிப்படை நேர்மறையான நோக்கத்துடன் விளையாடுவது. அதிரடியாக விளையாடுவது என்பது அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பதல்ல.
சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதிலிருந்து எப்படி அணியின் வசமாக்க முடியுமோ அதுதான் புத்திசாலித்தனம்.
அடித்தால் 250 அல்லது இல்லையேல் 70 ரன்கள் என இருக்க விரும்பவில்லை.
சூல்நிலையை உடனடியாக உணர்ந்து அந்த பிட்சுக்கு எவ்வளவு ரன்கள் தேவையோ அதிலிருந்து கூடுதலாக 20 ரன்கள் அடிக்க முயற்சிப்போம். அதுதான் கேகேஆரின் அதிரடி.
ரஹானே, ரகுவன்ஷியுடனான உரையாடல் முக்கியமானது. அனைத்து பந்துகளையும் அடிக்க முடியாது. நேரமெடுத்து பிட்ச்சுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டுமென முடிவெடுத்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 223 ரன்கள் இலக்கு!

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

ஆல் ஃபார்மட் வீரராக இருப்பது சவால் கிடையாது, வரம்: வாஷிங்டன் சுந்தர்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



