முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து இன்றுடன் ஓய்வை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகேந்திர சிங் தோனி

Published On :5 ஏப்ரல் 2025, 6:21 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த மார்ச் 22 அன்று தொடங்கின. 74 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வருகிற மே 25 வரை நடைபெறவுள்ளன.

சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியும் விளையாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியே சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசியாக இருக்குமென்றும் இத்துடன் அவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விளையாடமாட்டார் என்றும் அணியை தோனி வழிநடத்துவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், போட்டி ஆரம்பிக்கையில் ருதுராஜே கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 2-வது போட்டியில் தோனி முன்பே களமிறங்கி ஆட்டத்தை வெல்ல உதவுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் 9-வது ஆட்டக்காரராக அஷ்வினுக்குப் பின் களமிறங்கியது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அத்துடன், அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் ஒரு பேட்டியில், “தோனியால் முதல் பத்து ஓவர்கள் நின்று விளையாட முடியாது. அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் பின்னால் களமிறக்கப்படுகிறார்” எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, முந்தைய ஐபிஎல் தொடரிலேயே ஓய்வை அறிவிக்காமல் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ஐபிஎல் விளையாடுகிறார் என்று தோனி மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் பெற்றோர்

சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் பெற்றோர்

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலிருந்து முன்னரே ஓய்வுபெற்ற மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் தொடரிலிருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

மேலும், தோனியின் பெற்றோர் முதல்முறையாக நேரில் அவர் விளையாடும் போட்டியைக் காண வந்துள்ளனர். இது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.