காயத்திலிருந்து மீண்ட நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச்.22இல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ப்ராவின் வருகை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
பிஜிடி தொடரின் கடைசி போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. 3-1 என இந்திய அணி ஆஸி.யிடம் வீழ்ந்தது.
பின்னர், பும்ரா இல்லமலேயே சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.
ஏப்ரல் முதல் வாரத்தில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே பும்ராவும் வந்துவிட்டார்.
“சிங்கம் தனது காட்டுக்குள் வந்துவிட்டது” என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

மும்பை இந்தியன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; தீபக் சஹார் கூறியதென்ன?

கேகேஆர் அணியின் கிண்டல் பதிவுக்குப் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ்..! சாதனைக்குமேல் சாதனை!

மும்பை இந்தியன்ஸின் (24 - 11) ஆதிக்கத்துக்கு தடை ஏற்படுத்துமா கேகேஆர்?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


