டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வீரர் அரைசதம் கடந்து அசத்தினார். இது விராட் கோலி 99-வது அரைசதமாகவும் பதிவானது. முடிவில், 67 ரன்களில் அவுட்டானார்.
இதையும் படிக்க: டி20-யில் 200* விக்கெட்டுகள்: சாதனை படைத்த ஹார்திக் பாண்டியா!
இந்தப் போட்டியில் விராட் கோலி 17 ரன்களைக் கடந்தபோது டி20 போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்டோர் வரிசையில், விராட் கோலி 13000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
14562 - கிறிஸ் கெய்ல் (381 போட்டிகள்)
13610 - அலெக்ஸ் ஹேல்ஸ் (474 போட்டிகள்)
13557 - சோயிப் மாலிக் (487 போட்டிகள்)
13537 - கீரான் போலார்டு (594 போட்டிகள்)
13001* - விராட் கோலி (386 போட்டிகள்)
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவர் ஐபிஎல்லில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். இவ்வாறு, அவர் தொடர்ந்து விளையாடி அதிக ரன்கள் குவிக்கும்பட்சத்தில் முதலிடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹித், கோலியால் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறதா? யுவராஜ் சிங் கூறுவதென்ன?

சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை புதிய சாதனை!

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



