
ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் (35 வயது) ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒரு வேகப் பந்துவீச்சாளராக அதிக விக்கெட்டுகள் (184) எடுத்து புவனேஷ்வர் குமார் ஐபிஎல்-இல் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக சிஎஸ்கே முன்னாள் வீரர் டிவைன் ப்ராவோ 183 விக்கெட்டுகள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய (ஏப்.7) போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா விக்கெட்டினை எடுத்தபோது இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் புவனேஷ்வர்குமார்.
ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் சுழல்பந்து வீச்சாளரான சஹால் 206 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் புவனேஷ்வர்குமார் 3ஆம் இடத்தில் இருக்கிறார்.
இரண்டாம் இடத்தில் மற்றுமொரு சுழல்பந்து வீச்சாளரான சாவ்லா 192 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.
வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் புவனேஷ்வர் குமாருக்கு அடுத்ததாக ப்ராவோ, மலிங்கா, பும்ரா இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.