ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

நிக்கோலஸ் பூரன், மார்க்ரம் அதிரடி: லக்னௌவுக்கு 4-வது வெற்றி!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

நிக்கோலஸ் பூரன் - படம் | AP

Updated On :12 ஏப்ரல் 2025, 7:46 pm IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.

சாய் சுதர்சன், ஷுப்மன் கில் அரைசதம்

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஷுப்மன் கில் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சாய் சுதர்சன் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன் பின் களமிறங்கிய வீரர்களில் ஜோஸ் பட்லர் (16 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (2 ரன்கள்), ஷெர்ஃபேன் ரூதர்போர்டு (22 ரன்கள்), ராகுல் திவாட்டியா (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். லக்னௌ தரப்பில் ஷர்துல் தாக்குர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும், திக்வேஷ் சிங் ரதி மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

நிக்கோலஸ் பூரன், மார்க்ரம் அதிரடி

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.

லக்னௌ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், ரிஷப் பந்த் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், மார்க்ரமுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

அதிரடியாக விளையாடிய அய்டன் மார்க்ரம் 31 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், ஆயுஷ் பதோனி 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.