2-வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

South African team players

தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டேவிட் மில்லர் சதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 93 பந்துகளில் 142 ரன்கள் எடுத்தார். டெம்பா பவுமா 103 ரன்கள் எடுத்தார். மேத்யூ ப்ரீட்ஸ்க் 34 ரன்கள், டுயன் யான்சென் 27* ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா!

366 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். மிட்செல் மார்ஷ் 53 பந்துகளில் 84 ரன்களும் (10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்), டிராவிஸ் ஹெட் 76 பந்துகளில் 84 ரன்களும் (12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர்.

அதன் பின், கூப்பர் கானலி 10 ரன்கள், அலெக்ஸ் கேரி 17 ரன்கள், மாட் ரென்ஷா 32 ரன்கள், கேமரூன் கிரீன் 17 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் அதிரடியாக விளையாடிய சேவியர் பார்ட்லெட் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் லிஸாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ் மற்றும் ஜோர்ன் ஃபோர்டுயின் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அய்டன் மார்க்ரம் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய டேவிட் மில்லருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 30) நடைபெறுகிறது.

Summary

The South African team won the second ODI against Australia by 32 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.