ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் பஞ்சாப் கிங்ஸ் வீரர்! காரணம் என்ன?

வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.
லோக்கி ஃபெர்குசன்
லோக்கி ஃபெர்குசன்
Published on
Updated on
1 min read

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லோக்கி ஃபெர்குசன் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கடந்த சனிக்கிழமை (ஏப். 12) நடந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 245/6 ரன்கள் எடுத்திருந்தனர்.

அடுத்ததாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 18.3 ஓவர்களில் 247/2 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியின்போது இரு பந்துகள் மட்டுமே வீசிய லோக்கி ஃபெர்குசன் தனது இடது தொடைப் பகுதியில் வலி ஏற்பட்டதால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், அவருக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடமாட்டார் என அணியின் பந்துவீத்து பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்தார்.

“ஃபெர்குசன் இந்தத் தொடரிலிருந்து விலகுகிறார். அவர் மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிகவும் கடினம். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

முன்னதாக தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தாண்டு பிப்., மார்ச் மாதங்களில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஃபெர்குசன் விளையாடவில்லை.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து அவர் வெளியேறியிருப்பது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. இந்தத் தொடரில் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடிய 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பஞ்சாப் அணி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-ம் இடத்திலிருக்கும் நிலையில் இன்று (ஏப். 15) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் முல்லான்பூரில் உள்ள ஹோம் கிரௌண்டில் மோதவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com