முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்: ரிஷப் பந்த்

தலைமைப் பண்பு குறித்து லக்னௌ அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் பேசியதாவது...
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த் படம்: எக்ஸ் / எல்எஸ்ஜி
Published on
Updated on
1 min read

தலைமைப் பண்பு குறித்து லக்னௌ அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

தில்லி அணியில் இருந்து லக்னௌ அணிக்கு மாற்றமடைந்துள்ள ரிஷப் பந்த் தலைமையில் எல்எஸ்ஜி அணி களம் காண்கிறது.

2022, 2023ஆம் சீசன்களில் பிளே-ஆஃப் வரை சென்றது. கடந்தாண்டு புள்ளிப் பட்டியலில் 7ஆம் இடத்துக்கு சென்றாதால் கேப்டன் கே.எல்.ராகுல் மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் கேப்டன்சி (தலைமைப் பண்பு) குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசியதாவது:

முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்

நான் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன். இதுதான் நான் கடந்த 2 ஆண்டுகளாக கற்றுக்கொண்டது. அணி நிர்வாகம், வீரர்கள் உடன் அதிகமாக பேசும்போது உறவு மேலும் பலமாகும்.

ஒட்டுமொத்த அணிக்கும் தகவல்களை பரிமாற ஒற்றைச் சாதனம் இருந்தால் நல்லது. அப்படி இருந்தால் அனைவரும் ஒரே எண்ணத்தில் கோப்பையை நோக்கி பயணிக்க முடியும். இதில்

சவாலான விஷயம் என்னவென்றால் நிறைய மூத்த வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் அனைவரும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். இதுதான் மிகப்பெரிய சவாலன விஷயம்.

சுதந்திரம் முக்கியம்

வீரர்களுக்கு சுதந்திரம் அளித்து அவர்கள் நினைத்தபடி விளையாடுவதற்கு அனுமதி அளிக்கும் ஒருவராகவே நான் இருக்க விரும்புகிறேன்

வீரர்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படி செய்யலாம். இது மிகவும் சாதாரண சிந்தனை. ஆனால், இதைச் செய்வதைவிட சொல்வது எளிது. ஏனெனில் இதற்கு ஒவ்வொருவரிடம் இருந்தும் கடுமையான முயற்சி தேவை என்றார்.

லக்னௌ அணி தனது முதல் போட்டியை மார்ச்.24இல் தில்லியை எதிர்த்து விளையாடவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com