டிவைன் ப்ராவோ
டிவைன் ப்ராவோகோப்புப் படம்

சாம்பியன் மனநிலையை கேகேஆர் அணியில் புகுத்துவேன்: டிவைன் ப்ராவோ

கேகேஆர் அணியின் புதிய ஆலோசகர் டிவைன் ப்ராவோ அளித்த பேட்டி...
Published on

கேகேஆர் அணியின் புதிய ஆலோசகர் ப்ராவோ சாம்பியன் மனநிலையை கேகேஆர் அணியில் புகுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

கௌதம் கம்பீருக்குப் பதிலாக கேகேஆர் அணியின் ஆலோசகராக முன்னாள் மே.இ.தீ. வீரரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் ப்ராவோ நியமிக்கப்பட்டார்.

கடந்தமுறை கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த ஆல்-ரவுண்டரான ப்ராவோ 631 விக்கெட்டுகள், 17 டி20 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

சாம்பியன் மனநிலையை கேகேஆர் அணியில் புகுத்துவேன்

ப்ரோவோ பேசியதாவது:

கேகேஆர் அணியில் சாம்பியன்களுக்கான மனநிலையை கொண்டு வருவேன். நான் வெற்றிப் பெறுவதை நம்புகிறேன்.

என்னுடைய சாதனைகள் அவர்களுக்காக பேசும். ஆனால், முடிவாக அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களை அவர்களது வழியிலேயே சாம்பியன்களாக்க உதவ வேண்டும்.

கேகேஆர் அணி மீது உலகம் முழுவதும் நன்மதிப்பு இருக்கிறது. நான் விளையாடும்போது கேகேஆரில் சில வீரர்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

80 சதவிகித சாம்பியன்கள்

இந்த அணியில் இணைவது மகிழ்ச்சி. டிரினிடாட் & டொபாக் அணியில் கேப்டனாக இருப்பது அதிர்ஷடமானது. உலகம் முழுமைக்கும் கேகேஆர் அணியின் புகழினை கொண்டுச் செல்வதில் உறுதியாக இருக்கிறேன்.

வெற்றிக்குக் காரணம் போட்டி மீதான ஆர்வமே. இந்த அணியில் 9-10 வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் வெற்றிப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி வெற்றிப் பெறுவதெனத் தெரியும். அதுதான் எங்களது நோக்கமும்.

சந்திரகாந்த் பண்டிட் ஒரு லெஜெண்ட்

மற்றவர்களின் வெற்றியையும் நட்புணர்வையும் கொண்டாடுங்கள்.

சந்திரகாந்த் பண்டிட் ஒரு லெஜெண்ட். அவரை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அணிக்கு இன்றியமையாத மதிப்பினைக் கொண்டு வருகிறார்.

அணிக்கு சாமர்த்தியமான வழிகளை மட்டுமல்ல வெற்றிப் பெறுவதற்கான கலாசாரத்தையும் உருவாக்கியுள்ளார் என்றார்.

கேகேஆர் அணிக்கு முதல் போட்டி மார்ச்.22இல் ஆர்சிபியுடன் மோதவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Open in App
Dinamani
www.dinamani.com