
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் 7 புதிய இந்திய நடுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.
அதிக அழுத்தம் நிறைந்த, அதிக வருவாய்மிக்க போட்டியான இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் இந்திய நடுவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 7 புதிய இந்திய நடுவர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் 2025: 17 சீசன்களாக நடுவர்; இந்த முறை புதிய அவதாரம்!
அவர்களில் ஸ்வரூபாந்த் கண்ணூர், அபிஜித் பட்டாச்சார்யா, பரஷார் ஜோஷி, அனிஷ் சஹஸ்ரபுத்தே, கேயூர் கேல்கர், கௌசிக் காந்தி மற்றும் அபிஜித் பெங்ரி ஆகியோர் பணியாற்றவுள்ளனர். மேலும், அனுபவமிக்க நடுவர்களான எஸ். ரவி மற்றும் கே. நந்தன் ஆகியோர் நடுவர்களின் ஆலோசர்களாக செயல்படவுள்ளனர்.
தமிழக நடுவருக்கு வாய்ப்பு
தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் தமிழக அணிக்காக 34 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள கௌசிக் காந்தி ஐபிஎல் தொடரில் பணியாற்றவிருக்கிறார். இவர் மகளிர் பிரீமியர் லீக்கிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
இவர்களைத் தவிர்த்து வெளிநாட்டு நடுவர்களான மைக்கேல் கோஃப், கிறிஸ் காஃப்னி, ஏட்ரியன் ஹோல்ஸ்டாக் ஆகிய மூவர் மட்டும் கள நடுவர்களாக உள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான நடுவர் குமார் தர்மசேனா ஐபிர்ல் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய நடுவரான அனில் சௌத்ரி தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றவிருப்பதால் அவர் நடுவராக தொடரமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.