ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதில் மகிழ்ச்சி என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

News image

விராட் கோலி - படம் | ஐபிஎல்

Updated On :6 மே 2025, 12:19 pm

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதில் மகிழ்ச்சி என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டனாக அணியை விராட் கோலி வழிநடத்தி வந்தார்.

இருப்பினும், கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். அதன் பின், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். அதன் பின், ஓராண்டு கழித்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

விராட் கோலி கூறியதென்ன?

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருந்தது ஒரு கட்டத்தில் மிகவும் கடினமாக மாறியதாக விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக விராட் கோலி பேசியதாவது: ஒரு கட்டத்தில் கேப்டன் பொறுப்பு எனக்கு மிகவும் கடிமனமானதாக மாறியது. ஏனெனில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. 7-8 ஆண்டுகளாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திக் கொண்டிருந்தேன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக 9 ஆண்டுகள் செயல்பட்டுள்ளேன். நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

அனைவரது கவனமும் என் மீது தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருந்தது. கேப்டன் பொறுப்பு மீது கவனம் கொடுக்கப்படாத தருணங்களில் என்னுடைய பேட்டிங் மீது கவனம் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக என் மீது கொடுக்கப்பட்ட கவனம் ஒரு கட்டத்தில் எனக்கு மிகவும் கடினமாக மாறியது. இறுதியில் அது அளவுக்கு அதிகமானதாக மாறியது.

என்மீதான கவனம் அளவுக்கு அதிகமாக அதிகரித்ததன் காரணத்தினாலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். ஏனெனில், நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன். என்மீது எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி, என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என விரும்பினேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.