
காயம் காரணமாக ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் விலகுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பயிற்சிக்காக அணியில் இணைந்துள்ளார்.
புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் இந்த சீசனில் ஆர்சிபி அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, மீண்டும் மே.17 முதல் தொடங்குகின்றன.
புதிய அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதேசமயம் வெளிநாட்டு வீரர்களுக்குப் பதிலாக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆர்சிபி அணியில் சிறப்பாக பந்துவீசி வந்த ஜாஸ் ஹேசில்வுட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சியினால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாமல் இருக்கும் ஆர்சிபி அணி இந்தமுறையாவது கோப்பையை வெல்லுமா என அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆர்சிபிக்கு அடுத்த போட்டி மே.17ஆம் தேதி சின்னசாமி திடலில் கொல்கத்தா அணியுடன் விளையாட இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.