ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னௌ வீரர் திக்வேஷ் ரதி இருவரும் மைதானத்தில் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 61-வது போட்டி லக்னௌவின் எக்கானா மைதானத்தில் நேற்றிரவு(மே 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்ற நிலையில், தோல்வியடைந்த லக்னௌ அணி ஃபிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில், லக்னௌ வீரர் திக்வேஷிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அபிஷேக் வெளியேறும் போது தனது வழக்கமான பாணியில் திக்வேஷ் கையெழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.
கள நடுவர்கள் மற்றும் அணி வீரர்கள் சேர்ந்து இருவரையும் விலக்கிவிட்டனர். மேலும், அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியின் முடியைப் பிடிப்பது போலவும் சைகை காட்டினார். போட்டி முடிந்ததும் இருவரும் சமாதனமாக மாறி, கை கொடுத்துக் கொண்டனர். பிசிசிஐ துணைப் பொதுச் செயலரும், காங்கிரஸ் எம்பியுமான ராஜீவ் சுக்லாவும் இருவரிடமும் சிறிது நேரம் இதுபற்றி பேசி சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கிரிக்கெட் திடலில் மோதிக் கொண்ட லக்னௌ வீரர் திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகித அபராதமும், ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 5 தகுதியிழப்பு புள்ளிகள் பெற்றதால், அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு 25 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அபராதம் பெறுவதோ அல்லது சர்ச்சைகளில் சிக்குவது திக்வேஷூக்கு புதிதொன்றும் கிடையாது. இதற்கு முன்னதாக, பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முறையே 25 மற்றும் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Kuch log hote hain jinhe bina baat ke Attitude hota hai, ye Digvesh Rathi vahi banda hai pic.twitter.com/1C6uvjlSXY
— Prayag (@theprayagtiwari) May 19, 2025
Whom do I support ? My ethnic Jaat brethren Digvesh Rathi, or my Linguistic Majhe da Baaman brethren Abhishek Sharma ? pic.twitter.com/7KbCuRMwz7
— Learner (@Learner73A) May 20, 2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

91 பந்துகளில் 233 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம்!

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



