முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?

பிளே ஆஃப் சுற்றுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

ஜோஸ் ஹேசில்வுட் - படம் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (எக்ஸ்)

Updated On :23 மே 2025, 6:48 pm IST

பிளே ஆஃப் சுற்றுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நான்கு நாள்களில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கான நான்கு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மீண்டும் ஆர்சிபியுடன் இணையும் ஜோஸ் ஹேசில்வுட்?

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒருவாரம் தற்காலிகமாக நிறுத்திவைப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பினர். ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டாலும், தேசிய அணிக்காக விளையாட வேண்டியிருப்பதால் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர்களது அணியுடன் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக அந்த அணிக்காக விளையாடவில்லை. அவர் கடைசியாக ஏப்ரல் 27 ஆம் தேதி ஆர்சிபிக்காக விளையாடியிருந்தார். அதன் பின், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக வேண்டியிருப்பதால், அந்த அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடவில்லை.

இந்த நிலையில், தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜோஸ் ஹேசில்வுட் பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யும் முனைப்பில் ஆர்சிபி உள்ளது.

பிளே ஆஃப் சுற்று வருகிற மே 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபியுடன் மீண்டும் இணைந்தால், அந்த அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.