
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227/3 ரன்களை குவித்தது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்ய லக்னௌ அணி அதிரடியாக ரன்களை குவித்தது.
மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்து ஆர்சிபி பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள்.
ஆர்சிபி சார்பில் புவனேஷ்வர் குமார், நுவான் துசாரா, ஷெப்பர்டு தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
சதமடித்த ரிஷப் பந்த் பல்டி அடித்து கொண்டாடினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றால் டாப் 2 இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்கோர் கார்டு
மிட்செல் மார்ஷ் - 67
மேத்திவ் ப்ரீட்ஸ்கி - 14
ரிஷப் பந்த் - 118*
நிகோலஸ் பூரன் - 13
அப்துல் சமத் - 1*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.