பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற சூர்யவன்ஷி!

14 வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான சூர்யவன்ஷி மோடியைச் சந்தித்தது குறித்து...
Vaibhav Suryavanshi with PM Modi. (pics from Modi, X)
பிரதமர் மோடியுடன் சூர்யவன்ஷி. படம்: எக்ஸ் / மோடி.
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் 14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த சீசனில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பிகார் முதல்வர், கூகுள் சிஇஒ உள்பட பலரும் இந்தச் சிறுவனுக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள்.

7 போட்டிகளில் விளையாடிய சூர்யவன்ஷி 252 ரன்களை அடித்தார். இதில் ஒரு சதம், அரைசதம் அடங்கும். குறிப்பாக 206.55 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தனது குடும்பத்துடன் சூர்யவன்ஷி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யான்ஷியையும் அவரது குடும்பத்தையும் சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. அவரது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் இந்தச் செயலுக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com