ஒலிம்பிக்: இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி
By DIN | Published On : 01st August 2021 07:12 PM | Last Updated : 01st August 2021 08:30 PM | அ+அ அ- |

டோக்யோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நடந்த காலிறுதி போட்டியில் பிரிட்டண் அணியை, இந்திய அணி எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து
ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. 1980ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.