'ஒலிம்பிக்கில் அழுத்தத்தை உணரவில்லை': தங்கம் வென்ற நீரஜ் சொல்வதைக் கேளுங்கள் (விடியோ)

சர்வதேச போட்டிகளில் விளையாடியது உதவியதால் ஒலிம்பிக்கில் அழுத்தத்தை உணரவில்லை என ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
'ஒலிம்பிக்கில் அழுத்தத்தை உணரவில்லை': தங்கம் வென்ற நீரஜ் சொல்வதைக் கேளுங்கள் (விடியோ)


சர்வதேச போட்டிகளில் விளையாடியது உதவியதால் ஒலிம்பிக்கில் அழுத்தத்தை உணரவில்லை என ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் இளம் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். ஒலிம்பிக் தடகளத்தில் சுதந்திர இந்தியா பெறும் முதல் தங்கம் இது.

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியது:

"சிறப்பான முதல் எறிதல் நம்பிக்கையைத் தரும். மற்ற வீரர்களுக்கு அது அழுத்தத்தை உண்டாக்கும். என்னுடைய இரண்டாவது எறிதலும் நிலையாக இருந்தது. என்னுடைய தனிப்பட்ட அதிகபட்சம் 88.07 மீட்டர். எனவே, ஒலிம்பிக் சாதனையான 90.57 மீட்டரை முறியடிக்க முடிவு செய்தேன். என்னால் முடிந்தவற்றைச் செய்தேன். ஆனால், முறியடிக்க முடியவில்லை. 90 மீட்டர் இலக்கை விரைவில் எட்டுவேன்.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் இந்தாண்டு எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. நான் விளையாடிய 2-3 சர்வதேச போட்டிகள் எனக்கு நிறைய உதவின. இதனால், ஒலிம்பிக்கில் அழுத்தத்தை உணராமல் எனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முடிந்தது.

அடில் சாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் நீ தற்போது விளையாடக் கூடாது, ஒலிம்பிக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பிற்காலத்தில் அது பிரச்னையை உண்டாக்கலாம் என்றார். எனவே, அதை ரத்து செய்தேன். அது நல்ல முடிவு என தற்போது நினைக்கிறேன். நான் கடுமையாக உழைத்து நன்றாகத் தயாரானேன்.

ஒலிம்பிக்கில் எந்தவொரு போட்டியும் ஒருநாள் போட்டி என நான் கருதவில்லை. வருடக்கணக்கிலான கடுமையானப் பயிற்சியும், பலரது ஆதரவும்தான் என்னை இந்த சாதனையை அடையச் செய்தது" என்றார் நீரஜ் சோப்ரா.

விடியோ:

புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com