ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. 
ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி போட்டியில் அயர்லாந்தை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. 

முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. 

இந்நிலையில் அயர்லாந்தை இன்று எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி. ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 57-வது நிமிடத்தில் நவ்னீத் கெளர் கோல் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ராணி ராம்பால் ரிவர்ஸ் ஹிட் அடித்ததை அழகாக கோல் ஆக மாற்றினார் நவ்னீத். எனினும் இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு 14 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்ததும் அதில் ஒன்றைக் கூட கோல் ஆக மாற்ற முடியாமல் ரசிகர்களை ஏமாற்றினார்கள். 

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது. இதனால் முதல் 4 இடங்களைப் பிடிக்கக் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமையில் உள்ளது. 

குரூப் ஏ பிரிவில் தலா 3 புள்ளிகளுடன் அயர்லாந்து 4-ம் இடத்திலும் இந்திய அணி 5-ம் இடத்திலும் உள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது. அந்த அணி 4 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com