முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பாரீஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து வெளியேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெளியேறினார்.

பி.வி. சிந்து - படம்: ஒலிம்பிக்ஸ்

Published On :

பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெளியேறினார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (16வது சுற்று), பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 - 19, 21 - 14, என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் மட்டுமே எஞ்சியுள்ளார். பாட்மிண்டனில் இந்தியாவுக்கான பதக்கத்தை (ஆண்கள் பிரிவில்) அவர் உறுதி செய்வார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து, ‘ஹாட்ரிக்’ பதக்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா், 19-21, 14-21 என்ற நோ் கேம்களில், சீனாவின் ஹி பிங்ஜியாவிடம் வீழ்ந்தாா். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இவரை வீழ்த்தியே சிந்து வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. இருவரும் இத்துடன் 21-ஆவது முறையாக சந்தித்த நிலையில், சிந்து 10-ஆவது தோல்வியை சந்தித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.