பாரீஸ் ஒலிம்பிக்: தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியா தோல்வி!
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் செளத்ரி தோல்வி.


பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் செளத்ரி தோல்வி அடைந்தார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இன்று (ஆக. 4) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாருல் செளத்ரி பங்கேற்றார்.
பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோல்வி அடைந்ததால், தடை தாண்டும் ஓட்டத்தில் பாருல் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
அதன்படி, தடை தாண்டும் ஓட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் 3 மீட்டரை 9:23.39 விநாடிகளில் கடந்தார். இந்தத் தொடரில் இது அவரின் சிறப்பான ஆட்டமாகும். எனினும் பட்டியலில் அவர் 8வது இடத்தை மட்டுமே பிடித்தார்.
கென்யாவின் பேட்ரிஸ் சேப்கோயேச் 9:13.56 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். முதல் 5 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதி பெற்றவர்கள் என்பதால், பாருல் செளத்ரி ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...