கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று(ஆக. 6) இந்தியாவுக்கு முக்கியமான நாள்...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 4:47 am

DIN

பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று(ஆக. 6) இந்தியாவுக்கு முக்கியமான நாள். ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று(ஆக. 6) களமிறங்குகிறார். இந்திய நேரப்படி பகல் 3.20 மணிக்கு விளையாட்டு ஆரம்பமாகிறது. குரூப்-பி பிரிவில் இடம்பிடித்துள்ள நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குரூப்-ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் கிஷோர் குமார் ஜேனா பகல் 1.50 மணிக்கு ஆரம்பமாகும் தகுதிச்சுற்றுப் போட்டியில் களம் காணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றிரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய ஹாக்கி வீரர்கள் களம் காண உள்ளனர்.

பகல் 1.30 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி களம் காணுகிறது.

பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்தத்தில் 68 கிலோ எடைப்பிரிவில் நிஷா தஹியா களம் காணுகிறார்.

பகல் 2.50 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிரண் பஹல் களம் காணுகிறார்.

பகல் 3 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் வினேஷ் போகத் களம் காணுகிறார்.

இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால் மாலை 4.20 மணிக்கு ஆரம்பமாகும் காலிறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கலாம். அதில் வெற்றி பெற்றால் இரவு 10.25 மணிக்கு ஆரம்பமாகும் அரையிறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெறுவார்.

மாலை 6.13 மணிக்கு மகளிருக்கான படகு ஓட்டுதல் போட்டியும், மாலை 7.13 மணிக்கு ஆடவருக்கான படகு ஓட்டுதல் போட்டியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.