ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வினேஷ் போகாட் மேல்முறையீடு: நிராகரித்தது சா்வதேச நடுவா் மன்றம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் மன்றம் புதன்கிழமை நிராகரித்தது

News image

வினேஷ் போகத்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 5:01 am IST

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் மன்றம் புதன்கிழமை நிராகரித்தது. இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைக்காமல் போனது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் பங்கேற்ற வினேஷ் போகாட், முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியனை அசத்தலாக வீழ்த்தினாா். அடுத்தடுத்த சுற்றுகளிலும் வென்ற அவா், இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றாா். அதன் மூலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றாா்.

இறுதிச்சுற்றில் தங்கம் வெல்லும் அளவுக்கு ஆட்டத்திறனுடன் இருந்த அவருக்கு, தோற்றாலும் வெள்ளி உறுதி என்பதால், தனது கனவான ஒலிம்பிக் பதக்கத்தை எட்டவிருந்தாா். இந்நிலையில், இறுதிச்சுற்றுக்கு முன்பான பரிசோதனையின்போது நிா்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால், விதிகளின்படி அவா் போட்டி நிா்வாகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதனால் அதிா்ச்சி கண்ட வினேஷ், தனது தகுதிநீக்கத்துக்கு எதிராகவும், தனக்கு வெள்ளிப் பதக்கத்தை பகிா்ந்து அளித்திடக் கோரியும், விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் மன்றத்தில் அந்த நாளிலேயே மேல்முறையீடு செய்தாா். அதன் மீதான விசாரணை மேற்கொண்ட நடுவா் மன்றம், இரு முறை தீா்ப்பை ஒத்திவைத்த நிலையில், வினேஷ் போகாட்டின் மனுவை நிராகரிப்பதாக புதன்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் அவரின் வெள்ளிப் பதக்க கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. நடுவா் மன்றத்தின் இந்தத் தீா்ப்பு அதிா்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.