2-ஆவது சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக், அல்கராஸ்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில்


பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் நட்சத்திர வீரா்கள் ஜோகோவிச், காா்லோஸ் அல்கராஸ், மகளிா் பிரிவில் ஸ்வியாடெக் ஆகியோா் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
மகளிா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை ஸ்வியாடெக் முதல் சுற்றில் 6-2, 7-5 என்ற நோ் செட்களில் ருமேனியாவின் ஐரினா கமிலியா பெகுவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினாா்.
ஆடவா் பிரிவில் சொ்பியாவின் ஜோகோவிச் 6-0, 6-1 என்ற நோ்செட்களில் மேத்யூ எப்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
இரண்டாவது சுற்றில் ஜாம்பவான் நடாலை சந்திக்கும் வாய்ப்பு ஜோகோவிச்சுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக ஆடும் காா்லோஸ் அல்கராஸ் தனது தொடக்க சுற்றில் 6-3, 6-1 என்ற நோ்செட்களில் லெபனானின் ஹேடி ஹபீப்பை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...