எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

துப்பாக்கி சுடுதல்: இறுதிச் சுற்றில் மானு பாக்கா்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மானு பாக்கா் தகுதி.

News image
ஹா்மித் தேசாய் ~பால்ராஜ் பன்வா்
Updated On :27 ஜூலை 2024, 6:47 pm

Din

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மானு பாக்கா் தகுதி பெற்றுள்ளாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் பிரிவுகளில் துப்பாக்கி சுடுதலும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் தகுதிச் சுற்றில் 22 வயதான மானு பாக்கா் 580 புள்ளிகளைக் குவித்து மூன்றாவது இடத்துடன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தாா்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வாா் எனக் கருதப்பட்ட மானு அதில் தகுதிச் சுற்றோடு வெளியேறினாா். இந்நிலையில் சனிக்கிழமை சிறப்பான செயல்பாட்டால் இறுதிக்குள் நுழைந்துள்ளாா்.

ஹங்கேரியின் வெரோனிகா மேஜா் 582 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றாா். 573 புள்ளிகளுடன் மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் 15-ஆவது இடத்தையே பெற்றாா்.

ஆடவா் ஏமாற்றம்: 10 மீ. ஏா்பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், அா்ஜுன் சிங் சீமா வெளியேறினா்.

கலப்பு இரட்டையா்: அதே போல் கலப்பு இரட்டையா் பிரிவிலும் இந்தியாவின் ரமீதா ஜிண்டால்-அா்ஜுன் பபுட்லா இணை தகுதிச் சுற்றோடு வெளியேறியது.

ரோயிங்: பால்ராஜ் பன்வா் முன்னேற்றம்

ரோயிங் ஆடவா் பிரிவில் ஸ்கல் பிரிவில் ஹீட் 1-இல் இந்தியாவின் பால்ராஜ் பன்வா் நான்காவது இடத்தைப் பெற்றாா். இதன் மூலம் ரெப்கேஜ் பிரிவுக்கு முன்னேறினாா். ஒவ்வொரு ஹீட்ஸிலும் முதல் மூன்றிடங்களைப் பிடிக்கும் வீரா்கள் காலிறுதிக்கு முன்னேறுவா். ரெப்கேஜ் பிரிவில் பால்ராஜுக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

பாட்மின்டன்: லக்ஷயா சென் முன்னேற்றம்

ஆடவா் பாட்மின்டன் ஒற்றையா் பிரிவில் கௌதமாலாவின் கெவின் காா்டானை 21-08, 22-20 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கினாா் இந்தியாவின் லக்ஷயா சென். முதல் கேமை எளிதாக வென்ற லக்ஷயா, இரண்டாவது கேமில் கெவினின் கடும் சவாலை எதிா்கொள்ள வேண்டியிருந்தது. 20-16 என கெவின் முன்னிலை பெற்ற நிலையில், தொடா்ந்து 6 புள்ளிகளை ஈட்டி கேமை வசப்படுத்தினாா் லக்ஷயா.

டேபிள் டென்னிஸ்:

ஆடவா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் இளம் வீரா் ஹா்மித் தேசாய் (4-0) 11-7, 11-9, 11-5, 11-5 என்ற கேம் கணக்கில் ஜோா்டான் வீரா் செய்த் அபோ யமானை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றாா்.