இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடிபோதையில் மாம்பலம் ரயில்நிலையத்தில் 3 இளைஞர்கள் சாவு

குடிபோதை காரணமாக மாம்பலம் ரயில்நிலையத்தில் 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் மோதி உயிரிழந்தனர்.

News image
இடமிருந்து மனோஜ், சஷாங், கார்த்திக்
Updated On :29 ஆகஸ்ட் 2017, 1:05 pm

DIN

குடிபோதையால் மாம்பலம் ரயில்நிலையம் அருகில் கார்த்திக் (24), சஷாங் (20), மனோஜ் (25) ஆகிய 3 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.

மாம்பலம் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களின் இடையில் இந்த 3 இளைஞர்களும் தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து மது அருத்தியதாக ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் இருந்த கார்த்திக் என்பவரின் சகோதரரிடம் ரயில்வே காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும் குடிபோதையில் இருந்த அந்த 3 பேரும் பாதுகாப்பு மதில் சுவரைத் தாண்டி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்ததாக ரயில்வே காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறை மற்றும் கார்த்திக் சகோதரர் ஆகியோர் தொடர்ந்து எச்சரித்தும் குடிபோதையில் ரயில் வருவது தெரியாமல் அதில் சிக்கி உயிரிழந்தனர்.

சஷாங் மற்றும் மனோஜ் ஆகியோர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பு கூட முடிக்காத கார்த்திக் திருமணமாகி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:35 மணியளவில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் மோதியதில் சஷாங், மனோஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்த்திக் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டது. 3 பேரின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.