மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குல்தீப் யாதவ் இந்த அரிய சாதனைப் படைத்த 2-ஆவது இந்திய வீரர் ஆவார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி 139, பிருத்வி ஷா 134, ரவீந்திர ஜடேஜா 100* சதங்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் 92, புஜாரா 86 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 53, கீமோ பால் 47 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்நிலையில், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் 3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை 185 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
2-ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனுடன் அனைத்து ரக (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 2-ஆவது இந்திய வீரர் என்ற அரிய சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்பாக புவனேஸ்வர் குமார் இச்சாதனையை செய்த முதல் இந்திய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
3 ரக போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் விவரம் பின்வருமாறு:
- டிம் சௌத்தி (நியூஸிலாந்து)
- அஜந்தா மெண்டீஸ் (இலங்கை)
- உமர் குல் (பாகிஸ்தான்)
- லசித் மலிங்கா (இலங்கை)
- இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா)
- புவனேஸ்வர் குமார் (இந்தியா)
- குல்தீப் யாதவ் (இந்தியா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துரித வேகத்தில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எனக்கு புதிய அடையாளமாக இருக்கும்: நடிகர் சூர்யா

எபோலா அச்சம்: மருத்துவமனையைத் தவிர்க்கும் கர்ப்பிணிகள்... காங்கோவில் இரட்டிப்பான உயிரிழப்பு!

நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் காவிரியாற்றங்கரை பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து வெறிச்சோடியது!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



