/

இங்கிலாந்து டாஸ் வெற்றியைக் கொண்டாடியதால் உத்வேகம் கொண்டோம்: விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

News image
Updated On :29 நவம்பர் 2016, 12:41 pm

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணிக்கு 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிதான இலக்கை 20.2 ஓவர்களில் கடந்தது இந்திய அணி. 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பார்தீவ் படேல் 67, கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 4-வது டெஸ்ட், மும்பையில் டிசம்பர் 8 அன்று தொடங்குகிறது. 

டெஸ்ட் போட்டி முடிவடைந்தபிறகு பேட்டியளித்த விராட் கோலி கூறியதாவது:

இங்கிலாந்து அணி டாஸில் வென்றபிறகு அதைக் கொண்டாடினார்கள். இது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. டாஸில் வென்றாலும் நன்றாக விளையாடினால்தான் ஜெயிக்கமுடியும். டாஸ் வென்றதால் அவர்கள் அடைந்த உற்சாகம் எங்களுக்கு உத்வேகம் அளித்தது. இந்தத் தொடரில் எந்த பிட்சும் சுழற்பந்துக்குச் சாதகமாக அமையவில்லை. நாங்கள் சிறப்பான முறையில் விளையாடி ஜெயித்துள்ளோம் என்றார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.