இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ-யின் 87-வது ஆண்டுப் பொதுக் குழு மும்பையில் இன்று நடைபெற்றது. அதில், இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக எம்எஸ்கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இந்திய அணியில் 1998 முதல் 2000 வரை விக்கெட் கீப்பராக விளையாடியவர்.
சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து பிரசாத் தலைமையில் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவில் தேவங் காந்தி, ககன் கோடா, சரண்தீப் சிங், ஜதின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள்.
இதற்கு முன்பு தேர்வுக்குழு தலைவராக இருந்த சந்தீப் பாட்டீலின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அவர் 2012-ம் ஆண்டு அப்பதவிக்குத் தேர்வானார். இதனையடுத்து பிரசாத் அப்பொறுப்புக்குத் தேர்வாகியுள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.
41 வயதான எம்எஸ்கே பிரசாத், 6 டெஸ்டுகள், 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


