அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஐபிஎல்: ஹைதராபாத் அணி 176 ரன்கள் குவிப்பு!

20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :22 ஏப்ரல் 2017, 12:16 pm

DIN

புணேவில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. புணே அணியில் 17 வயது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். 

டாஸ் வென்ற புணே அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஹைதராபாத் தொடக்க வீரர்களான வார்னரும் தவணும் 55 ரன்கள் சேர்த்தார்கள். பிறகு 30 ரன்களில் தவண் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 21 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். வார்னர் 43 ரன்களில் வெளியேறினார்.

ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 28 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புணே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஹைதராபாத் ஒரு வெற்றியும், புணே ஒரு வெற்றியும் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.