அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஐபிஎல்: குஜராத் அணியில் இர்பான் பதான்!

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள டுவைன் பிராவோ-வுக்குப் பதிலாக இர்பான் பதானை...

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 10:17 am

DIN

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள டுவைன் பிராவோ-வுக்குப் பதிலாக இர்பான் பதானை குஜராத் அணி தேர்வு செய்துள்ளது.

குஜராத் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது டாஸ் போடுவதற்கு வந்த குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பிராவோ அணியில் இல்லை. அவர் காயத்திலிருந்து குணமடைய மூன்று முதல் 4 வாரங்கள் வரை ஆகலாம். அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிட்டார். இது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் பேசி பிராவோவுக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்' என்றார்.

பிக்பாஷ் கிரிக்கெட் லீகில் விளையாடியபோது பிராவோவுக்கு இடது காலில் தசைநார் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிராவோ, குஜராத் அணியுடன் இணைந்தார். எனினும் இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட விளையாடவில்லை. இந்த நிலையில் காயம் முழுவதுமாக குணமடையாததால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து இர்பான் பதானை குஜராத் அணி தேர்வு செய்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இர்பான் பதானை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் தற்போது குஜராத் அணிக்கு அவர் தேர்வாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.