இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

லெக் ஸ்பின்னராக மாறும் அஸ்வின்! இந்திய அணியில் மீண்டும் இடம்பெற புதிய முயற்சி!

இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கடந்த நான்கு மாதங்களாக லெக் ஸ்பின் முறையில் பந்துவீச தீவிரப் பயிற்சியில்...

News image
Updated On :22 டிசம்பர் 2017, 9:46 am

எழில்

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக ஆஃப் ஸ்பின்னர்களை விடவும் லெக் ஸ்பின்னர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒருநாள் போட்டிகளில் அதன் முதன்மைத் தேர்வாக இருப்பவர்கள் - லெக் ஸ்பின் உள்ளிட்ட மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள். இதனால்தான் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆரம்பித்து சாஹல், குல்தீப் யாதவ் போன்ற மணிக்கட்டைப் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பெளலர்களுக்குத்தான் இந்திய அணி நிறைய வாய்ப்புகளை அளித்து வருகிறது. இதனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமமாக உள்ளது.  

இந்த நிலையைச் சமாளிக்க ஜடேஜா என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சவாலை தன் பாணியில் எதிர்கொண்டுவருகிறார் அஸ்வின். அடுத்த தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு முழு வீச்சில் தயாராகிவருகிறார். ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் பல்வேறு வகையான பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தும் அஸ்வின், தற்போது லெக் ஸ்பின் முறையில் பந்துவீச முயன்று வருகிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விஏபி டிராபி போட்டியில் பங்கேற்ற அஸ்வின், கிராண்ட் ஸ்லாம் அணிக்கு எதிரான போட்டியில் வீசிய 9 ஓவர்களில் ஆறு ஓவர்களை லெக் ஸ்பின் முறையில் பந்து வீசியிருக்கிறார். லெக் ஸ்பின் முறையால் இரு விக்கெட்டுகளும் அவருக்குக் கிடைத்துள்ளது. அனில் கும்ப்ளே பந்துவீசும் முறையை அஸ்வின் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கடந்த நான்கு மாதங்களாக லெக் ஸ்பின் முறையில் பந்துவீச தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஸ்வின். நேற்றைய போட்டியில் முதல் மூன்று ஓவர்கள் ஆஃப் ஸ்பின் வீசிய அஸ்வின், அடுத்த 6 ஓவர்களும் லெக் ஸ்பின் முறையில் பந்துவீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து விக்கெட் கீப்பர் ஜெகதீசன் ஒரு பேட்டியில் கூறியதாவது: ரஞ்சி போட்டியிலேயே அவ்வப்போது இதுபோல முயற்சி செய்தார் அஸ்வின். லெக் ஸ்பின்னை மிகவும் துல்லியமாக வீசுகிறார். அவருடைய பந்துகள் நன்றாக சுழல்கின்றன. நன்கு உயரமாக உள்ளதால் நல்ல பவுன்ஸ் கிடைக்கிறது என்று அஸ்வினின் இந்த முயற்சியை ஒரு பேட்டியில் பாராட்டியுள்ளார்.

சாஹல், குல்தீப் யாதவைத் தாண்டி அஸ்வினால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழையமுடியுமா? அவருடைய இந்த முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.