மீண்டும் களமிறங்குகிறார் செரீனா வில்லியம்ஸ்! ஆச்சர்ய அறிவிப்பு!
தாயாகியிருக்கும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அபுதாபியில் நடைபெறவுள்ள முபாதலா கண்காட்சி டென்னிஸ் போட்டி மூலம்...


தாயாகியிருக்கும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அபுதாபியில் நடைபெறவுள்ள முபாதலா கண்காட்சி டென்னிஸ் போட்டி மூலம் 2018-ஆம் ஆண்டு சீசனை தொடங்கவுள்ளார். இத்தகவலை செரீனா அறிவித்துள்ளார்.
செப்டம்பரில் மகள் பிறந்தபிறகு மீண்டும் டென்னிஸ் களத்துக்குள் காலடி எடுத்துவைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தப் போட்டியின்மூலம் நான் மீண்டும் களமிறங்கியுள்ளேன் என 36 வயது செரீனா கூறியுள்ளார். திடீரென அபுதாபி போட்டியில் விளையாடுவதாக செரீனா அறிவித்திருப்பது டென்னிஸ் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நடைபெறவுள்ள கண்காட்சி போட்டியில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜெலீனாவை எதிர்கொள்கிறார் செரீனா.
இதையடுத்து ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்றத் திட்டமிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...