இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

2017-ல் மகத்தான சாதனைகளை படைத்துள்ள இந்திய அணி! சாதனை விவரங்கள்!

2017-ம் வருடம் இந்திய அணிக்கு மகத்தான முடிவுகளை அளித்துள்ளது. இதுவரையில்லாத அளவுக்கு அதிக வெற்றிகளைக் குவித்துள்ளது...

News image
Updated On :25 டிசம்பர் 2017, 3:38 am

எழில்

2017-ம் வருடம் இந்திய அணிக்கு மகத்தான முடிவுகளை அளித்துள்ளது. இதுவரையில்லாத அளவுக்கு அதிக வெற்றிகளைக் குவித்துள்ளது.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வென்றது. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி ஓர் ஆண்டில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் அனைத்து ஃபார்மட்டிலுமாக இந்தியா மொத்தம் 37 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது, ஓர் ஆண்டில் ஒரு அணி பெற்றுள்ள 2-ஆவது அதிகபட்ச வெற்றியாகும்.

ஆஸ்திரேலியா கடந்த 2013-ஆம் ஆண்டில் மொத்தம் 38 வெற்றிகளை பெற்றதன் மூலம் முதலிடத்தில் உள்ளது. 

2017-ல் இந்தியா

டெஸ்டுகள்: விளையாடிய போட்டிகள் - 11; வெற்றி - 7; தோல்வி - 1; டிரா - 3
ஒருநாள்: விளையாடிய போட்டிகள் - 29; வெற்றி - 21; தோல்வி - 7; முடிவில்லை - 1 
டி20: விளையாடிய போட்டிகள் - 13; வெற்றி - 9; தோல்வி - 4
ஒட்டுமொத்தமாக: விளையாடிய போட்டிகள் - 53; வெற்றி - 37; தோல்வி - 12; 

அதேபோல கடந்த இரு வருடங்களாக இந்திய அணி இந்தியாவில் நடைபெற்ற எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் தோற்றதில்லை. 16 தொடர்களில் தோல்வி பெறாமல் இந்திய அணி உள்ளது.

சொந்த மண்ணில் தோல்வியில்லாமல் பங்கேற்ற தொடர்கள்

24 இந்தியா (1988-99)
23 மேற்கிந்தியத் தீவுகள் (1974-90)
23 ஆஸ்திரேலியா (2003-08)
16 இந்தியா (2015-17) *

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.