2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 218 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

News image
Updated On :17 ஜூலை 2017, 7:29 pm

DIN

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 218 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.
எனினும் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு சமவாய்ப்பிருப்பதால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 94.4 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் இர்வின் 160 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 102.3 ஓவர்களில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் உபுல் தரங்கா 71, தினேஷ் சன்டிமல் 55 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் கிரெமர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது.
4-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராஸா 160 பந்துகளில் அரை சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதன்பிறகு வாலர் 68 ரன்களில் ஆட்டமிழக்க, சிக்கந்தர் ராஸா 205 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களில் கேப்டன் கிரெமர் 48 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 107.1 ஓவர்களில் 377 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே. இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
388 ரன்கள் இலக்கு: இதையடுத்து 388 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியில் உபுல் தரங்கா 27, கருணாரத்னே 49, கேப்டன் தினேஷ் சன்டிமல் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள்எடுத்துள்ளது. குஷல் மென்டிஸ் 60, மேத்யூஸ் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 218 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் இலங்கை வெற்றி பெறுமானால் கொழும்பு மைதானத்தில் இலக்கை துரத்திய போட்டிகளில் ஓர் அணி பெற்ற பெரிய வெற்றியாக இது அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.